பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்டவர்களை மருத்துவக் குழுவினர் கண்காணிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி வட்டாரத்தில் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக தனிமைப் படுத்தப்பட்டவர்களை மருத்துவக் குழுவினர் கண்காணித்து ஆலோசனை வழங்கினர்.

விக்கிரவாண்டி வட்டார மருத்துவமனைக்குட்பட்ட ஒன்றியத்தைச் சேர்ந்த 50 ஊராட்சிகளில் நேற்று முன்தினம் வரை வெளிநாடுகளிலிருந்து வீடு திரும்பியவர்கள் 12 பேரும், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் பிழைப்பு தேடி கூலி வேலைக்கும் , தனியார் நிறுவனங்களில் பணியிலிருப்பவர்கள் 40 பேர் என மொத்தம் 52 பேர் கொரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களது வீடுகளுக்கு வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில் தாசில்தார் பார்த்திபன், பி.டி.ஓ., நாராயணன் , சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், ஆய்வாளர் பாபு மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சிகளைச் சேர்ந்த வி.ஏ.ஓ., ஊராட்சி செயலர் ஆகியோர் கொண்ட குழுவினர் நேரில் சென்று தனிமைப்படுத்தப்பட்டதற்கான நோக்கம் குறித்தும் , அவர்கள் தனியாக வீட்டில் இருப்பதால் நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கும் எனவும் , அவர்கள் முழுமையாக ஒத்துழைப்பு தரவேண்டும் என அறிவுறுத்தினர்.மேலும், வீட்டின் முகப்பில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு, மற்றும் எத்தனை நாட்கள் அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற தேதியை நபரின் கையில் சீலிட்டும், வீட்டில் ஸ்டிக்கரும் ஒட்டினர்.பின்னர் ஒவ்வொரு கிராம வீதிகளிலும் வேனில் சென்று வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வீடு திரும்பியவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், , அவர்கள் வீடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் யாரும் தொடர்பு கொள்ளக் கூடாது எனவும் , நோய் தொற்று யாருக்கும் பரவாமல் இருக்க யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என மைக்கில் அறிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X