மக்கள் கூடுவதை தவிர்க்க சப் கலெக்டர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்கள் கூடுவதை தவிர்க்க சப் கலெக்டர் ஆய்வு

Added : மார் 26, 2020
Share

திண்டிவனம் : திண்டிவனத்தில் மக்கள் கூட்டத்தைக் குறைக்கும் வகையில், சப் கலெக்டர் தலைமையில் போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. அதனையொட்டி, திண்டிவனம் சப் கலெக்டர் அனு மேற்பார்வையில், டவுன் டி.எஸ்.பி., கனகேஸ்வரி, திண்டிவனம் நகராட்சி கமிஷனர் ஸ்ரீபிரகாஷ் உள்ளிட்ட அதிகாரிகள், காய்கறி மார்க்கெட் உள்ள நேரு வீதியில் நேற்று காலை 11.00 மணியளவில் திடீர் ஆய்வு நடத்தினர்.அப்போது, மருந்து, காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளில், மக்கள் கூட்டத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.மேலும், காய்கறி கடைகள், மருந்து கடைகளில், மார்க் செய்த இடத்தில் நிற்க வைத்து, ஒருவர் பின் ஒருவராக பொருட்களை வழங்க வேண்டும். கூட்டம் சேர வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.சப் கலெக்டர் உத்தரவின் பேரில், நகராட்சி சார்பில் ஒவ்வொரு கடைகளின் முன்பாக பிளீச்சிங் பவுடரால் வட்டம் போட்டு, அதில் பொது மக்களை நிற்க வைப்பதற்கான இடம் மார்க் செய்யப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X