பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா அச்சமின்றி வயல்களில் வீடுகட்டி வசிக்கும் விவசாயிகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வயல்களில் வீடுகட்டி வசிக்கும் விவசாயிகள் கொரோனா தொற்று நோய் அச்சமின்றி நிம்மதியாக வசிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு 5,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களின் வயல்களில் வீடுகளைக் கட்டி வசிக்கின்றனர். இதற்கு காட்டுக் கொட்டகை என இப்பகுதியில் அழைக்கப்படுகிறது.இவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வயல் வேலைகளை செய்து அதன்மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். விவசாயத்தோடு சார்ந்து ஆடு, மாடு, கோழி வளர்ப்பு, காய்கறி விளைவித்தல் உள்ளிட்டவைகளை மேற்கொள்கின்றனர்.

இதன் மூலம் பால் உற்பத்தி, காய்கறிகளை விற்பனை செய்வதன் மூலம் உபரி வருவாய் ஈட்டி வருகின்றனர். இவர்கள் தங்களின் அன்றாட உணவுக்குத் தேவையான அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்டவைகளை வயலில் விளைவித்துக் கொள்வதால தினசரி செலவுகள் குறைவாகிறது. வயல்களில் குடியிருப்பதால் இயற்கையோடு கூடிய சுகாதாரமான வாழ்க்கையை இவர்களால் மேற்கொள்ள முடிகிறது.தற்போது கொரோனா நோய்த்தொற்று காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வீடுகளை விட்டு யாரும் வெளியே வரக்கூடாது என பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என மக்கள் பீதியில் உள்ளனர்.இதனால் நகர்ப்புறங்களில் அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களிடம் எந்த தொடர்பையும் வைத்துக் கொள்ளாமல் தனித்திருக்கின்றனர்.

அதேபோல் தங்களின் அனைத்து அத்தியாவசிய தேவைக்கும் வெளியே செல்லவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தும் பயம் காரணமாக அதைத் தவிர்த்து வருகின்றனர்.இதுபோன்ற சூழ்நிலையில் வயலில் குடியிருக்கும் விவசாயிகள் எவ்வித சிரமமும் இன்றி தங்கள் குடும்பத்தினருடன் வீடுகளில் நிம்மதியாக வசிக்கின்றனர். நகர் புறங்களில் உள்ளவர்களைப்போன்று, இவர்கள் எந்தப் பொருளையும் வாங்கி இருப்பு வைக்கவில்லை.

வெளி தொடர்பு எதுவும் இன்றி, தங்களுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் குறைந்தது ஓராண்டு கூட வயலில் விளைவித்து தனித்து வாழ முடியும். அந்நியர்கள் யாரும் இவர்கள் வீடுகளுக்கு எளிதில் செல்லாத அளவுக்கு வேட்டை நாய்களையும் வளர்த்து வருகின்றனர்.இதனால் வெளியாட்கள் மூலம் நோய் பரவும் அபாயமும் இவர்களுக்கு இல்லை. இந்தியாவே பீதியில் இருக்கும் இத்தருணத்தில் நோய்த்தொற்று அச்சமின்றி வயல் வெளிகளில் வீடுகளைக் கட்டி குடியிருக்கும் விவசாயிகள் நிம்மதியாக இருப்பதை காணமுடிகிறது. இயற்கையோடு சார்ந்த வாழ்க்கை முறை என்றைக்கும் பாதுகாப்பு என்பதை இது உணர்த்துவதாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X