பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசம் அதிக விலைக்கு விற்றால்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திண்டிவனம் : திண்டிவனத்தில், கொரோனா குறித்து, அனைத்து வியாபாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நகராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கமிஷனர் ஸ்ரீபிரகாஷ் தலைமை தாங்கினார்.

பொறியாளர் பவுல்செல்வம், நகர அமைப்பு ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், துப்புரவு அலுவலர் (பொறுப்பு) தேவநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் கமிஷனர் பேசியதாவது:கொரோனா நோய் பரவுவதை தடுக்கும் அரசின் நடவடிக்கைக்கு அனைத்து வியாபாரிகளும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மருந்து கடைகளில் முக கவசம் தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். கூடுதல் விலையில் விற்றால் சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைக்கப்படும்.திருமணம் மண்டபங்களில் வரும் 31ம் தேதி வரை புக் செய்தவர்களிடம், திருமணத்திற்கு குறைந்தது 30 பேர் மட்டும் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்த வேண்டும். ஓட்டல்களில் உணவு பார்சல் மட்டுமே வழங்க வேண்டும். அனைத்து ஓட்டல்களும் இரவு 7:00 மணிக்கு மேல் திறந்திருக்கக் கூடாது.மளிகை , காய்கறி கடைகளில் ஒரே சமயத்தில் அதிக அளவில் கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு கமிஷனர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X