பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரின் கடுமையான கட்டுப்பாடு: கட்டுக்குள் வந்தது ஊரடங்கு

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் போலீசார் விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் தடுப்புகளை ஏற்படுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனாவின் கோரத்தாண்டவம் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் ஒரு பகுதியாக பிரதமர் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. மாவட்ட எல்லைகள் முற்றிலுமாக மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் எல்லையோரம் இருக்கும் திருக்கோவிலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து துண்டிக்கும் வகையில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.இதற்காக டி.அத்திப்பாக்கம், முருக்கம்பாடி, மூங்கில்துறைப்பட்டு, திருக்கோவிலுார் பகுதிகளில் தடுப்புகளை ஏற்படுத்தி விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள், மக்கள் நடமாட்டம் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக திருக்கோவிலுார் டி.எஸ்.பி., மகேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் செல்வம், சுமதி மேற்பார்வையில், சிவச்சந்திரன், உலகநாதன் உட்பட 10 சப் இன்ஸ்பெக்டர்கள், 100 போலீசார் எல்லை பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருக்கோவிலுார் தென்பெண்ணையாற்றின் குறுக்கே இருக்கும் உயர்மட்ட பாலத்தின் ஒரு பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுாரையும், மற்றொரு பகுதி விழுப்புரம் மாவட்ட எல்லையான மணம்பூண்டியையும் இணைப்பதாக உள்ளது.

நேற்றைய ஊரடங்கு உத்தரவின் போது மாவட்ட எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் உயர்மட்ட பாலத்தின் 2 பகுதிகளிலும், 2 மாவட்ட போலீசாரும் தடுப்புகளை ஏற்படுத்தி போக்குவரத்தை முற்றிலுமாக தடை செய்தனர்.இதன் காரணமாக காய்கறி, உணவுப் பொருட்கள், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசியப் பணிக்கு மணம்பூண்டி, அரகண்டநல்லுார் பகுதி மக்கள் திருக்கோவிலுாரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் உள்ள நிலையில் போலீசாரின் கடும் கட்டுப்பாடுகளால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.காலை 8:00 மணி வரை காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு போலீசார் அனுமதி அளித்த நிலையில், இதனைப் பயன்படுத்தி பலரும் இருசக்கர வாகனங்களில் படையெடுக்கத் துவங்கினர்.

இதனால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக கடைபிடிக்க முடியாதோ என்ற நிலை ஏற்பட்டது.நிலைமை மோசம் அடைவதை உணர்ந்த போலீசார் 9:00 மணிக்கு மேல் தங்கள் செயல்பாட்டை மாற்றிக் கொண்டு கடும் எச்சரிக்கையுடன் நடவடிக்கையில் இறங்கினர். இதன் காரணமாக இரு சக்கர வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி முழுமையான ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது.நகரில் அனைத்து கடைகளும் முழுமையாக மூடியிருந்தன. பஸ் நிலையம் முக்கிய வீதிகளில் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆங்காங்கே கட்டுப்பாடுகளை மீறி சுற்றித் திரிந்தவர்களை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X