பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா முன்னெச்சரிக்கை பணி; விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ. 3.40 கோடி

Added : மார் 26, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள 3.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில் கொரோனாவைத் தடுக்க விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க 100 படுக்கைகள் கொண்ட தனி அறை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள 2.05 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும், ஊரக வளர்ச்சி நிதியிலிருந்து 1.35 கோடி ரூபாயை அத்தியாவசிய தேவைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 3 பேரின் ரத்த மாதிரிகள் எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில், 2 பேருக்கு கொரோனா வைரஸ் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 113 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர். தடை உத்தரவு மீறும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் சண்முகம் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X