பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிகளில் நேரம் குறைப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

பெ.நா.பாளையம், : வங்கிகளின் நேரம் குறைப்பால், இன்று முதல் காலை நேரத்தில் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உள்ளது.

வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை இணையம் வழியாக பயன்படுத்தலாம்.தமிழகத்தின் மாநில அளவிலான வங்கிகள் குழு நேற்று முன்தினம் வெளியிட்ட பொது வணிக தொடர்ச்சி திட்டத்தின்படி, அடுத்த அறிவிப்பு வரும் வரை வங்கிகள் காலை, 10.00 மணி முதல் மதியம், 2.00 மணி வரை மட்டுமே செயல்படும் என, அறிவித்துள்ளன.இதனால் கோவை புறநகர் பகுதியில் உள்ள அரசு, தனியார், வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவித்துள்ளன.

வங்கி அதிகாரிகள் கூறுகையில், ''வங்கி சேவை தடையின்றி கிடைக்க, அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.வாடிக்கையாளர்கள் அனைவரும் வங்கி சேவைகளை இணையம் வழியாக பயன்படுத்தலாம். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக மட்டும் வங்கிக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறோம். நம் அனைவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற சேவையை உறுதி செய்யும் வகையில் பணம் எடுத்தல் மற்றும் கட்டுதல், காசோலை பரிமாற்றம் பணம் அனுப்புதல், அரசாங்க பரிவர்த்தனைகள் ஆகியவை மட்டும் நடக்கும்' என்றனர்.

நேற்று தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால், அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது.இன்று முதல், வங்கிகளில் வாடிக்கையாளர்களின் கூட்டம் வழக்கத்தை விட, அதிக அளவில் காணப்படும். வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பயன்படுத்தி வங்கிகளின் சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X