பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை பணியாளர்களுக்கு உணவு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகரப்பகுதியில், துாய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.பொள்ளாச்சி நகரப்பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட துறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், துாய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் மொத்தம், 348 துாய்மை பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். காலை, 6:00 மணிக்கு பணிக்கு வரும் தொழிலாளர்கள், குடியிருப்பு பகுதிகளில் குப்பை பெறுதல், மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த, நகராட்சிக்கு உட்பட்ட பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால், பணியாளர்கள் டீ மற்றும் உணவு சாப்பிட உணவகங்கள் தேடி அலைய வேண்டியுள்ளது. நகராட்சியில் நேற்று பணியில் ஈடுபட்டவர்களுக்கு, தனியார் மெஸ் மூலமாக உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து உணவு வழங்க முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'காலை, 6:00 மணிக்கு பணிக்கு வந்து இடைவிடாமல், பணியாற்றும் துாய்மை பணியாளர்களுக்கு உணவு தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அம்மா உணவகம் அல்லது மாற்று ஏற்பாடு செய்து பணியாளர்களுக்கு தேவையான உணவு கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X