பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி மார்க்கெட்டாக மாறிய கள்ளக்குறிச்சி பஸ் நிலையம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் 144 தடை அமலில் இருப்பதால் பஸ் நிலைய பகுதியை தற்காலிக காய்கறி விற்பனை செய்ய பயன்படுத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உழவர் சந்தை அடைக்கப்பட்டது. இதனால், தற்காலிக அடிப்படையில் பஸ் நிலையத்தில் போதிய இடைவெளியுடன் அமைக்கப்பட்ட கடைகளுக்குச் சென்று அச்சமின்றி பொதுமக்கள் காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.கொரோனா தொற்றிலிருந்து மக்கள் உயிரை பாதுகாக்க நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் சிலவற்றை தவிர அனைத்து அரசு மற்றும் தனியார் இயந்திரங்களும் முடக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சியில் உழவர் சந்தையும் அடைக்கப்பட்டன. இதனால் விவசாயிகள் காய்கறிகளை விற்பதற்கு வழியின்றி சாலையோரங்களில் வைத்து விற்பனை செய்து வந்தனர்.இந்நிலையில் வாகனங்களின் வரத்து ஏதுமின்றி வெறிச்சோடி கிடக்கும் பஸ் நிலையத்தில் காலை நேரங்களில் மட்டும் பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் காய்கறி விற்பனை செய்ய தேர்வு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு போதிய இடைவெளியுடன் கூடிய 20 கடைகளுக்கு இடம் அமைக்கப்பட்டது. இதனால் காய்கறிகள் கிடைக்காமல் போகுமோ என்ற அச்சத்தில் இருந்த பொதுமக்கள் பலரும் இங்கு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர். போலீசாரும் அங்கு கூட்டம் அதிகம் சேராமல் இருப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

கட்டணம் வசூல்...

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பொதுமக்கள் தேவைக்காக கடைகள் வைத்திருந்தவர்களிடமிருந்து கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டதால் கடைக்காரர்கள் வருத்தமடைந்தனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் சுங்க கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி கடைக்காரர்களிடமிருந்து தலா 70 ரூபாய் கட்டணம் வசூலித்து 40 ரூபாய்க்கான ரசீது கொடுத்ததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X