சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறி ஊர் சுற்றிய4 பேர் மீது வழக்குப்பதிவு

Added : மார் 26, 2020
Share
Advertisement

திண்டிவனம் : ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மக்கள் வெளியே நடமாடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையும் மீறி பொது மக்கள் நேற்று வெளியே சுற்றித் திரிந்தனர்.மயிலம் உள்ளிட்ட பகுதிகளில் பைக்குகளில் திரிந்த ஆலகிராமம் செக்கடி தெருவைச் சேர்ந்த ராஜேஷ், 20; இந்திரா நகரைச் சேர்ந்த விக்னேஷ், 18; கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 31; கிடங்கல்-2 பகுதியைச் சேர்ந்த செந்தமிழ், 22; ஆகிய 4 பேர் மீதும் திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X