பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுாரில் வெறிச்சோடிய காய்கறி மார்க்கெட்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் ஒரு சில காய்கறி கடைகள் திறந்திருந்த போதிலும் வாங்குவதற்கு கூட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

திருக்கோவிலுார் காய்கறி மார்க்கெட்டிற்கு பெங்களூரு உள்ளிட்ட பகுதியில் இருந்து தினசரி காய்கறிகள் வரத்து இருக்கும். இதனை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதும். கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனையில் தடை இருக்காது என மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருந்தது.போலீசாரின் கடுமையான நடவடிக்கை காரணமாக திருக்கோவிலுார் மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க கூட்டம் இல்லை. ஒன்றிரண்டு பேர் மட்டுமே தடையை மீறி வந்து காய்கறிகள் வாங்கிச் சென்றனர். இதனால் காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது.ஒருசில தள்ளுவண்டி வியாபாரிகள் தடையை மீறி புறநகர் பகுதியில் தெருக்களில் காய்கறிகள் விற்பனை செய்ததைக் காண முடிந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X