சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வடமாநில தொழிலாளர்களால் சிக்கல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், வடமாநில தொழிலாளர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சாவாலாக மாறியுள்ளனர்.

பொள்ளாச்சி பகுதியில் செயல்படும் நுாற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களில், ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.கொரோனா பரவலை அடுத்து, ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பணியாற்றிய நிறுவனங்கள் மூடப்பட்டன.இதையடுத்து, அவர்கள் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பில், புறநகர் பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்கும் இடங்கள், இட நெருக்கடி மிகுந்ததாகவும், சுகாதாரமற்றதாகவும் உள்ளன.

இதனால், கொரோனா பரவலை தடுக்க அரசு வலியுறுத்தும் சமூக விலக்கை கடைப்பிடிப்பது சாத்தியமற்றதாகிறது. மேலும், பெரும்பாலான வடமாநிலத்தவர்கள், பாதுகாப்பு முகக்கவசம், கையுறை என எதையும் பயன்படுத்துவதில்லை.இப்படி சுகாதாரமற்ற சூழல் நிலவும் வளாகங்களுக்குள், நிறுவனங்களை சேர்ந்த உள்ளூர்வாசிகள் தினமும் சென்று வருகின்றனர். இதன் மூலம், நோய் பரவல் அபாயம் பல மடங்கு அதிகரிக்கிறது.அரசு ஊரடங்கு போட்டும், பல்வேறு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், அவற்றை நடைமுறையில் செயல்படுத்த முடியாத இடங்களில் இருப்பவர்களை தனிமைப்படுத்த வேண்டியது மிக அவசியம்.இதை, சுகாதார துறை, உள்ளாட்சி நிர்வாகங்களுடன் இணைந்து உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X