பொது செய்தி

தமிழ்நாடு

துாய்மை காவலர்களுக்கு சம்பளபாக்கி வழங்க கம்யூ., கோரிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

விழுப்புரம் : பொது சுகாதார பணியில் ஈடுபட்டுள்ள துாய்மை காவலர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை வழங்க இந்திய கம்யூ., கட்சி வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்ட இந்திய கம்யூ., கட்சி செயலாளர் சரவணன் அறிக்கை:கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையில் உள்ளாட்சி அமைப்புகள் முழுமையாக ஈடுபட்டுள்ளன. இங்கு பொது சுகாதார பணியில் ஈடுபட்டுள்ள துாய்மை காவலர்களுக்கு கடந்த 2 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை.தற்போதுள்ள சூழலில் பொது சுகாதாரப் பணி முழுமையாக மேற்கொள்ளப்பட வேண்டியதால், ஊழியர்களுக்கு சம்பள பாக்கியை உடனடியாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.பொது விநியோகத் துறையில் மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஊழியர்களுக்கு நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க முக கவசம் மற்றும் கையுறை வழங்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X