பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யாததால் மின்வாரிய ஊழியர்கள் அதிருப்தி

Added : மார் 26, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனாவை பொருட்படுத்தாமல் பணிபுரியும் மின்வாரிய ஊழியர்களுக்கு எந்தவித பாதுகாப்பு கவசம் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை செய்து தராததால் மின்வாரிய ஊழியர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலக மக்களை அச்சுறுத்தி வருவதைத் தொடர்ந்து மக்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி காத்து கொள்ளுமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மின்வாரியம், காவல்துறை, உள்ளாட்சி மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட முக்கியப் பணிகளில் பணிபுரிபவர்கள் மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் முககவசம், கை கழுவுவதற்கான திரவம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அந்தந்தத் துறை அதிகாரிகள் மூலம் வாங்கி பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன் பேரில் மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முக கவசம், கை கழுவுவதற்கான திரவம் உள்ளிட்ட வைகள் வழங்க வேண்டும். மேலும், துணை மின் நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து தரவேண்டும்.அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்து அந்தந்த கோட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக இயக்குனர் (பகிர்மானம்) ஹெலன் கடந்த 4 நாட்களுக்கு முன் உத்தரவிட்டார்.

ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் மின்வாரிய ஊழியர்களுக்கு இதுவரை எந்தவித பாதுகாப்பு கவசங்கள் மற்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், மின்வாரிய ஊழியர்கள் தங்கள் சொந்த செலவிலேயே பாதுகாப்பு கவசங்கள், உணவு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு பணிபுரிந்து வருகின்றனர். தலைமையிடத்து உயர் அதிகாரி உத்தரவிட்டும் மாவட்ட மின்வாரிய அதிகாரிகள் எந்தவித வசதியையும் செய்து கொடுக்காதது மின்வாரிய ஊழியர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X