பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷனில் வேப்பிலை தோரணம்!

Added : மார் 26, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், மனுக்கள் கொடுக்க வருபவர்கள் கூட்டமாக வர வேண்டாம் என்றும், கைகளை கழுவ வேண்டும் என பொதுமக்களுக்கு, 'அட்வைஸ்' செய்யப்படுகிறது.

பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் செயல்படுகிறது. மகளிர் போலீசார், கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.போலீஸ் ஸ்டேஷன் முன்பகுதியிலும், உள்பகுதியிலும் வேப்பிலை கட்டப்பட்டு உள்ளது. முன் பகுதியில் மஞ்சள் நீரும் வைக்கப்பட்டுள்ளது.போலீஸ் ஸ்டேஷனுக்கு வருபவர்களிடம், ஸ்டேஷன் முன் நிறுத்தப்பட்டு மனுக்கள் பெறப்படுகின்றன. உள்ளே அனுமதிக்காமல் அப்படியே புகார் மனுக்களை பெற்று விசாரிக்கின்றனர்.

போலீசார், 'புகார் அளிக்க வருபவர்கள் கூட்டமாக வர வேண்டிய அவசியம் இல்லை; கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.எனவே, கூட்டமாக வருவதை தவிர்க்க வேண்டும். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கைகளை நன்றாக கழுவ வேண்டும்.பாதுகாப்பாக இருக்க வேண்டும். முக்கியமான புகார் மனுக்கள் கொடுக்க வருபவர்கள் மட்டும் புகார் வழங்கலாம்,' என அறிவுரை வழங்குகின்றனர்.வேப்பிலை கட்டப்பட்டு இருந்ததுடன், மஞ்சள் நீர் மற்றும் கிருமி நாசினி, கை மற்றும் கால்களை கழுவுவதற்காக வைக்கப்பட்டு இருந்தது.இதேபோன்று, 'நகர ரோந்து' வாகனத்திலும் வேப்பிலை வைத்தபடி போலீசார் வலம்வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X