சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டுக்கு வெளியே வராதீங்க: மீறினால் நடவடிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி : 'ஊரடங்கு உத்தரவு காலத்தில், தேவையில்லாமல் வெளியே வராதீங்க,' என, பொள்ளாச்சி போலீசார் எச்சரிக்கை விடுத்தும், 'அட்வைஸ்' செய்து மக்களை அனுப்பினர்.

பொள்ளாச்சியில் தடை உத்தரவு அமலுக்கு வந்தாலும், பொதுமக்கள் வழக்கம் போல வெளியே வந்து சென்றனர். தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை மறந்து, வழக்கம் போல இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் காலை முதல் வலம் வந்தனர்.போலீசார் தடுத்து கேட்டால், 'இறைச்சி கடைகளுக்கு செல்கிறேன்; மருந்து வாங்க செல்கிறேன், காய்கறி வாங்க செல்கிறேன்,' என கூறிச் சென்றனர்.காலை, 11:00 மணிக்கு மேல் கூட்டம், கூட்டமாக பைக்குகளில் மக்கள் சென்று வந்தனர்.

காந்தி சிலை அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட வருவாய்துறை மற்றும் போலீசார், வாகனங்களை தடுத்து நிறுத்தினர்.அப்போது, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 'தேவையில்லாமல் வீதிகளில் சுற்றக்கூடாது; கடைகளுக்கு ஒருவர் மட்டும் செல்ல வேண்டும்,' என அறிவுறுத்தினர்.சிலர் தேவையில்லாமல், கார் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுவதை கண்ட போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அருகே, போலீஸ் ஒருவர் 'ேஹண்ட் மைக்' வைத்து, 'ஐயாவீட்டுக்கு போங்க; ரோட்டுல சுத்தாதீங்க; கொரோனா வைரஸ் பரவாம கட்டுப்படுத்த ஒத்துழைப்பு கொடுங்க; வெளியே வராதீங்க,' என, 'அட்வைஸ்' செய்து அனுப்பி வைத்தார்.மகாலிங்கபுரம் ரவுண்டானா உள்ளிட்ட இடங்களில் போலீசார், ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.போலீசார் கூறுகையில், 'தடை உத்தரவு அமலில் உள்ளதால் தேவையில்லாமல் யாரும் வெளியே சுற்றக்கூடாது.

பொது இடத்தில் கூட்டமாக கூடக்கூடாது; கொரோனா வைரஸ் பரவாமல் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ரோட்டில் தேவையில்லாமல் சுற்றினால், சட்ட பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X