சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெளிநாடு பயணம் செய்த172 பேர் வீடுகளில் நோட்டீஸ்

Added : மார் 26, 2020
Share
Advertisement

உடுமலை : திருப்பூர் மாவட்டத்தில், வெளிநாடுகளில் இருந்து திரும்பிய, 172 பேர், தனிமைப்படுத்தப்பட்டு, தொடர் கண்காணிப்பில், வைக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், 'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் பட்டியல் சேகரிக்கப்பட்டது; தாங்களாகவே தகவல்களை தெரிவிக்கவும், கலெக்டர் அழைப்பு விடுத்திருந்தார்.அவ்வகையில், நேற்று வரை, வெளிநாடுகளில் இருந்து திரும்பிய, 172 பேர், மாவட்டம் முழுவதும், கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, மருத்துவ பரிசோதனை நடத்தி, வீடுகளிலேயே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டனர்.

அவ்வீடுகளின் முன்பு, சுகாதாரத்துறை மூலம் 'கொரோனா' தொற்று உள்ளே நுழையாதே தனிமைப்படுத்தப்பட்ட வீடு, 28 நாட்கள் வெளியே வரக்கூடாது என, நோட்டீஸ் ஒட்டப்பட்டு, மற்றவர்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருப்பூரைச்சேர்ந்த ஒருவருக்கு மட்டும் 'கொரோனா' தொற்று உறுதி செய்யப்பட்டு கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை நல்ல நிலையில் உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X