பொது செய்தி

தமிழ்நாடு

தடையை மீறி ரோட்டிற்கு வந்த வாகனங்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

உடுமலை : தடை உத்தரவை மீறி, ரோடுகளில் வந்த வாகனங்களை போலீசார் தடுத்தி நிறுத்தியும், எச்சரிக்கை செய்தும் விரட்டியடித்தனர்.

'கொரோனா' வைரஸ் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முன்தினம் முதல் வரும் ஏப்.,14 வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.கடைகள் மூடப்பட்டு, பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. நகர எல்லை பகுதிகள், பிரதான ரோடுகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், பால், காய்கறி என அத்தியாவசிய பணியாளர்கள் மட்டுமின்றி, பலர் பைக், கார்களில் நகரப்பகுதியில் சுற்றி வந்தனர்.

அதிலும், பைக்கில் பல இளைஞர்கள் உலா வந்தனர்.ரோடுகளில் வந்தவர்களை போலீசார் பல இடங்களில் தடுத்து நிறுத்தி, விசாரணை நடத்தினர்.அத்தியாவசிய பணியை காரணம் கூறியவர்களை மட்டும், எச்சரித்து அனுப்பி வைத்தனர்.இளைஞர்கள், ஊரை சுற்றி பார்க்க வந்தவர்களை லத்தியை சுழற்றி, துரத்தியடித்தனர். போலீசாரின் கடுமையான நடவடிக்கை காரணமாக, சிறிது நேரத்தில் ரோடுகளில், வாகன போக்குவரத்து பெருமளவு குறைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X