பொது செய்தி

தமிழ்நாடு

மருந்தகங்களில் போதிய இடைவெளியில் கோடுகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

உடுமலை : உடுமலை நகர மருந்தகங்களில், போதிய இடைவெளி விட்டு, மக்கள் நிற்கும் வகையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், மருந்தகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு, வழக்கம் போல் செயல்படுகின்றன.இந்நிலையில், மருந்து வாங்க வருபவர்களால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, தேவையான ஏற்பாடுகளை செய்ய மருந்தகங்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, உடுமலை நகர மருந்தகங்களில், மருந்து வாங்க வருபவர்கள், போதிய இடைவெளி விட்டு நிற்கும் வகையில், கோடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொருவராக வரிசையாக நின்று, மருந்து வாங்கி செல்வது குறித்து, சுகாதாரத்துறையினரும், ஆய்வு நடத்தி வருகின்றனர்.சில மருந்தகங்களில், காய்ச்சல் அறிகுறி குறித்த, பரிசோதனையும், மருந்து வாங்க வந்தவர்களுக்கு, மேற்கொள்ளப்பட்டது. நகரப்பகுதியில், இத்தகைய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், கிராமப்புற மருந்தகங்களில் இது குறித்த விழிப்புணர்வு இல்லை. எனவே, வட்டார மருத்துவ துறையினர், மருந்தக உரிமையாளர்களுக்கு இது குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X