பொது செய்தி

தமிழ்நாடு

வீட்டிலிருந்தே ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி பணிகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

உடுமலை : வீட்டிலிருந்தே பள்ளிக்கல்வி தொடர்பான பணிகளை செய்வதற்கு, கல்வித்துறை, ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

'கொரோனா' வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, ஏப்.,14ம் தேதி வரை ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மக்கள் அவரவர் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டுமென அரசு நடவடிக்கையை தீவிரப்படுத்தி வருகிறது.பல்வேறு தனியார் நிறுவனங்களும் வீட்டிலிருந்தே அவர்களின் பணிகளை கவனிக்க, அனுமதி அளித்து பணியாளர்களை வீடுகளுக்கு அனுப்பி விட்டது.கல்வியாண்டு முடிவதற்குள், ஆசிரியர்கள் பள்ளிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டதால், அவர்களுக்கும் வீட்டிலிருந்தே கவனிக்க வேண்டிய பணிகள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில் கல்வி சம்பந்தப்பட்ட பணிகளையும், பாடத்திட்டம் மற்றும் அடுத்த பருவத்திற்கான முன்னேற்பாடுகளையும் ஆயத்தப்பணிகளாக செய்யலாம்.2020-21 கல்வி ஆண்டிற்கான கற்றல் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் தயார் செய்திடலாம். ஆசிரியர்கள், அவர்களுக்கு பிடித்த கலைகளை மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்கு ஆயத்த பணியாக நடனம், வரைதல், பாரம்பரிய உணவு சமைத்தல், வண்ணம் தீட்டுதல், மற்றும் நடித்தல் போன்றவற்றுக்கு கருத்துகளை தயார்படுத்திக்கொள்ளலாம்.தயார் செய்த கலை நிகழ்ச்சிகளை, மாணவர்களுக்கு புதிய கல்வியாண்டில் பயிற்சி அளித்து, அவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகளில் பங்கேற்கச்செய்யலாம்.

முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் எந்த நேரத்தில் அழைத்தாலும், பதில் அளிக்கும் வகையில் ஆசிரியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.மாவட்ட நிர்வாகத்தின் மூலம், கல்வித்துறை அலுவலர்களால் ஆசிரியர்களுக்கு ஏதேனும் பணிகள் வழங்கப்படும்போது, அதனை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்களின் தொலைபேசி எண்கள், அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X