பொது செய்தி

தமிழ்நாடு

உழவர் சந்தையில் இடைவெளி பராமரிக்கணும் ; கட்டத்திற்குள் நிற்க மக்களுக்கு அறிவுறுத்தல்

Added : மார் 26, 2020
Share
Advertisement
உடுமலை : உடுமலை உழவர் சந்தையில், கூட்டம் சேருவதை தவிர்க்க, முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி, இடைவெளி விட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.உடுமலை உழவர் சந்தைக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விளை பொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 'கொரோனா' வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக, தினசரி சந்தை மூடப்பட்டுள்ளதால், காய்கறிகள்

உடுமலை : உடுமலை உழவர் சந்தையில், கூட்டம் சேருவதை தவிர்க்க, முக கவசம் அணிந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி, இடைவெளி விட்டு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.உடுமலை உழவர் சந்தைக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து விளை பொருட்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 'கொரோனா' வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக, தினசரி சந்தை மூடப்பட்டுள்ளதால், காய்கறிகள் கொள்முதல் செய்ய பொதுமக்கள் மட்டுமன்றி, வியாபாரிகளும் வருகின்றனர்.நேற்று, 84 விவசாயிகள், 28,345 கிலோ காய்கறிகள் கொண்டு வந்திருந்தனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர் காய்கறிகள் வாங்க வந்திருந்தனர்.இதனையடுத்து, போலீசார் உழவர் சந்தைக்கு வந்து, மைக் மூலம் அறிவுரை வழங்கியதோடு, கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையிலும், மக்களுக்கான இடைவெளியை அதிகரிக்கும் வகையிலும் ஒவ்வொருவராக உள்ளே அனுமதித்தனர்.இதற்கு தீர்வு காணும் வகையில், 'கொரோனா' தொற்று பரவாமல், சமுதாய இடைவெளியை அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகள் இன்று முதல் நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளனர். உழவர் சந்தை இயங்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு கடைகளுக்கும், ஒன்றரை மீட்டர் இடைவெளி விடப்பட்டு, அதில் மக்கள் நின்று காய்கறிகள் வாங்கும் வகையில், பிளீச்சிங் பவுடர் மூலம், பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், ஒரு சமயத்தில் பலர் உள்ளே செல்லாமல், வாயிற்கதவு அடைக்கப்பட்டு, குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஒருவர் சென்ற பின்னரே, மற்றவர்கள் கடை முன் செல்ல வேண்டும்.கோட்டாட்சியர் ரவிக்குமார் கூறுகையில், 'அத்தியாவசிய பொருள் என்பதால், உழவர் சந்தை செயல்படுகிறது. இருப்பினும், நோய்த்தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விவசாயிகள், பொதுமக்கள் மருத்துவ பரிசோதனைக்குப்பின்னரே அனுமதிக்கப்படுவர். வரும் அனைவரும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், இடைவெளியை பராமரிக்க வேண்டும்; அதற்காக, குறியீடு அமைக்கப்பட்டுள்ளது. அரசு எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கினால், பரவலை கட்டுப்படுத் முடியும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X