பொது செய்தி

தமிழ்நாடு

தண்ணீருக்கு சிக்கல் விவசாயிகள் சிறப்பு பூஜை

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோத்தகிரி : கோத்தகிரி பகுதியில் வறட்சி அதிகரித்தன் காரணமாக, காய்கறி விளை நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர்.

நீலகிரியில், தேயிலைக்கு அடுத்தபடியாக, மலை காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. நடப்பாண்டு, நீராதாரம் உள்ள விளை நிலங்களில், முட்டைக்கோஸ், அதிக பரப்பளவில் பயிரிட்டு, விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த பல நாட்களாக, மழை பெய்யாத நிலையில், நீராதாரங்கள் வறண்டு காணப்படுகின்றன. இதனால், பயிர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல், விவசாயிகள் திணறி வருகின்றனர்.

நடப்பாண்டு, கோத்தகிரி நெடுகுளா, வ.உ.சி., நகர், கட்டபெட்டு மற்றும் கூக்கல் தொரை உள்ளிட்ட பகுதிகளில், அதிக பரப்பளவில் முட்டைகோஸ் பயிரிடப்பட்டுள்ள நிலையில், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால், கிராமப்புற விவசாயிகள் மழை வேண்டி, வருண பகவானுக்கு, சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X