பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறி உலா வந்த மக்கள் உறுதி மொழி ஏற்க வைத்த அதிகாரிகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

உடுமலை : ஊரடங்கை மீறி ரோடுகளில் பயணித்த வாகன ஓட்டிகளை நிறுத்தி, அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, உறுதிமொழி ஏற்க வைத்தனர்.

'கொேரானா' வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையிலும், ஒருவர் மூலம் ஒருவருக்கு பரவும் சங்கிலி தொடரை அறுக்கும் வகையிலும், நேற்று முன்தினம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஆனால், 'கொேரானா' வைரஸ் குறித்த விழிப்புணர்வு, அதன் பாதிப்புகள் குறித்து அறியாமல், ஊரடங்கு உத்தரவையும் மீறி, பலர் வெளியில் சுற்றி வருகின்றனர்.

ரோடுகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதோடு, வாகனங்களை நிறுத்தி அறிவுரையும், வேலையில்லாமல் சுற்றி வந்தவர்களை விரட்டியும் அடித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று மாலை பஸ் ஸ்டாண்ட் அருகே, கோட்டாட்சியர் ரவிக்குமார், டி.எஸ்.பி.,ஜெயச்சந்திரன், இன்ஸ்பெக்டர் முருகேசன், தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.வாகனங்களை நிறுத்தி, 'கொரோனா' தொற்று பரவும் முறை, அதனால் சமுதாயத்திற்கு ஏற்படும் விளைவுகள், ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டியது குறித்து அறிவுரை வழங்கினர்.

தொடர்ந்து, உத்தரவை மீறி வந்தவர்கள்,' கொரோனா' தொற்று பரவாமல் தடுப்போம்; அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்; வீடுகளை விட்டு வெளியில் வர மாட்டோம்'' என உறுதிமொழி எடுக்க வைத்து, அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X