பொது செய்தி

தமிழ்நாடு

கோத்தகிரியில் முதியோர் உதவித்தொகை முதியோர் உதவித்தொகை வீடுகளுக்கு சென்று வழங்கினால் பயன்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோத்தகிரி : 'கோத்தகிரி பகுதியில், முதியோர் உதவித்தொகையை வீடுகளுக்கு சென்று வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

'கோத்தகிரி பகுதியில், முதியோர், முதிர் கன்னி, விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள்,' என, 1500க்கும் மேற்பட்டோர், அரசின் உதவித் தொகை பெறுகின்றனர். மாதந்தோறும் வங்கிகள் மூலம் வரும் பணத்தை, அந்தந்த வங்கிகள் நியமிக்கும் ஊழியர்கள், பயனாளிகளின் வீடுகளுக்கு சென்று பணத்தை வழங்குவது வழக்கம்.இந்நிலையில், கடந்த சில மாதங்களாக வீடுகளுக்கு செல்லாமல், ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து, ஒவ்வொரு நாளும் ஒரு பகுதியாக பிரித்து, பயனாளிகளை அங்கு வரவழைத்து பணத்தை வழங்கி வருகின்றனர்.

பெரும்பாலான பயனாளிகள் வயது முதியோராக இருப்பதாலும், பலர் மாற்றுத்திறனாளியாக இருப்பதாலும், அவர்களால். நீண்ட தூரம் நடந்து, குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர முடிவதில்லை.மேலும், அரவேனு உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயிலில் சாலையில் பாதுகாப்பு இல்லாமல், காத்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.எனவே, அரசின் உதவித்தொகை பெறும் பயனாளிகள் நலன் கருதி, பொது இடத்தில் வழங்காமல், அவரவர் வீடுகளுக்கு சென்று, நேரடியாக பணத்தை பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X