பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன்களுக்கு ரூ.2.75 கோடியில் வாகனங்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

ஊட்டி : நீலகிரி போலீஸ் ஸ்டேஷன்களுக்கு, 2.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வாகனங்கள் வழங்கப்பட்டன.

நீலகிரியில், 40க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. அன்றாட குற்ற வழக்குகளில் போலீசார் அரசு சார்பில், வழங்கப்பட்ட வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.அதில், ஊட்டி பி1, ஜி1, மஞ்சூர் போலீஸ் ஸ்டேஷன் உட்பட, 20க்கு மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் அன்றாட பணிக்கு வாகனங்கள் இல்லை.இதையடுத்து, மாநில அரசு சார்பில், மாவட்டத்தில், 2.75 கோடி ரூபாய் மதிப்பில் வாகனங்கள் வழங்கப்பட்டது.அதில், 'பொலேரோ-18, டெம்போ டிராவலர்-2, மினிபஸ்-2, லாரி-1, இருசக்கர வாகனம்-20, ஸ்கூட்டி-3 ஆகிய வாகனங்கள் அந்தந்த ஸ்டேஷனுக்கு நேற்று வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி, அரசு கலை கல்லுாரிமைதானத்தில் நடந்தது. மாவட்ட எஸ்.பி., சசிமோகன் பங்கேற்று அந்த போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்களுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில், ஏ.டி.எஸ்.பி., கோபி, டி.எஸ்.பி., சரவணன், திருமேனி, இன்ஸ்பெக்டர்கள் வினாயகம், ஜெயபாலன், தவுலத்நிஷா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X