பொது செய்தி

தமிழ்நாடு

மாநில எல்லை கடக்கும் காய்கறி வாகனங்கள் அதிகரிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

உடுமலை : மாநில எல்லையை கடப்பதற்கு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. காய்கறி, மளிகை பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களை கண்டறிய டோக்கன் முறையை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கேரளா மாநிலம், மூணாறு, மறையூர் பகுதிகளிலிருந்து, மளிகை, காய்கறி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு அதிகளவு பொதுமக்கள் உடுமலை வந்து செல்கின்றனர்.'கொரோனா' பரவலை தடுக்கும் வகையில், மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளதோடு, 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.உடுமலை- மூணாறு ரோட்டில், சின்னாறு சோதனைச்சாவடி மற்றும் ஒன்பதாறு சோதனைச்சாவடி பகுதியில், வனத்துறை, போலீஸ், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, அரசு துறை அதிகாரிகளை கொண்ட குழு, 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.கேரளாவிலிருந்து தமிழகத்திற்கும், இங்கிருந்து கேரளாவிற்கும் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், காய்கறி, மளிகை என அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அதிகளவு வந்து செல்கின்றன.நேற்றுமுன்தினம், 84 வாகனங்கள் வரை காய்கறிகள் ஏற்றி சென்றன. ஒவ்வொரு வாகனங்களில் வரும் டிரைவர்கள் மருத்துவ பரிசோதனை செய்யப்பபட்டு, வாகனம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, அதற்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது.அத்தியாவசிய போக்குவரத்து வாகனங்கள் மட்டுமின்றி, மற்ற வாகனங்கள் செல்வதை தடுக்கும் வகையிலும், டோக்கன் முறை அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.கோட்டாட்சியர் ரவிக்குமார் கூறுகையில், 'வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தும் போக்குவரத்தை கண்காணிக்கும் வகையில், தினமும் வந்து செல்லும் வாகனங்களுக்கு நாளை (இன்று) மட்டும் போலீஸ் சார்பில் 'டோக்கன்' வழங்கப்படும். அதனை, ஊரடங்கு முடியும் வரை வைத்திருக்க வேண்டும். டோக்கன் உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

புதிய வாகனங்கள், சோதனை சாவடியை கடக்க அனுமதிக்கப்படாது,' என்றார்.வட்டத்திற்குள் நிற்க வேண்டும்சோதனைச்சாவடியை கடக்கும் வாகன டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள், சுகாதாரத்துறை மூலம் மருத்துவ பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். 'கொரோனா' தொற்று வேகமாக பரவும் நிலையில், சுகாதாரத்துறை அலுவலர்கள் மற்றும் காத்திருக்கும் பொதுமக்கள் இடைவெளியை பராமரிக்கும் வகையில், சோதனை சாவடி பகுதியில், 'பிளீச்சிங்' பவுடர் கொண்டு, வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் வரிசையாக வர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X