பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் ஸ்டாண்டில் கை கழுவ வசதி உள்ளூர் மக்களுக்கு பெரும் பயன்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோத்தகிரி : கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்கள் கைகழுவ ஏதுவாக, தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம், உலக மக்களின் துாக்கத்தை கெடுத்துள்ளது. அரசு, பொதுமக்கள் மத்தியில், பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, மக்கள் கூடுமானவரை விழிப்புணர்வு அடைந்துள்ளனர்.கோத்தகிரி பகுதியில் மக்கள் பயன்பெற வசதியாக, பேரூராட்சி நிர்வாகம் சார்பில், கைகழுவ ஏதுவாக பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தாக்கம் குறித்தும், கை கழுவுவதன் அவசியம் குறித்தும், ஏற்கனவே பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.இதனால், கிராம மக்கள் ஒவ்வொரு பணிக்கும் பின்பும், முதலில் கை கழுவிய பின்பே, மற்ற பணிகளை செய்ய செல்கின்றனர். பெரும்பாலான மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 'மாஸ்க்' அணிந்து வருகின்றனர்.கோத்தகிரி பஸ் ஸ்டாண்ட் பகுதியில், துாசு படிந்த சுவர்கள் வர்ணம் பூசும் பணி நேற்று முன்தினம் முதல் நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X