பொது செய்தி

தமிழ்நாடு

கிராமத்தில் மூடப்பட்ட ஆரம்ப சுகாதார மையம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோத்தகிரி : கோத்தகிரி ஒன்னதலை ஆரம்ப சுகாதார மையத்திற்கு, செவிலியர் நியமிக்கப்படாமல் பூட்டப்பட்டுள்ளதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சி, ஒன்னதலை கிராமத்தில், 1990ம் ஆண்டு ஆரம்ப சுகாதார மையம் திறக்கப்பட்டது. இம் மையத்தை, ஒன்னதலை, பில்லிக்கம்பை, சக்தி நகர், கோவில் மேடு, மணவரை, குடிமனை மற்றும் காந்திநகர் மக்கள் பயன்படுத்தி வந்தனர். முதலுதவி, இரத்த அழுத்தம், சர்க்கரை, சிறுநீரக சிகிச்சை, பிரசவம், தடுப்பூசி மற்றும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திட்டத்திற்கான அனைத்து உதவிகள் இந்த மையத்தில், செயல்பட்டு வந்ததால், மக்கள் பயன் அடைந்தனர்.

ஆரம்பம் முதல் மையத்தில் தங்கி பணியாற்றிய செவிலியர் சகிலா, சமீபத்தில் பதவி உயர்வு கிடைத்த நிலையில், அக்., 20ம் தேதி கூடலுாருக்கு மாற்றப்பட்டார். இதனை தொடர்ந்து, கூக்கல்தொறை மையத்தில் பணியாற்றிய செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளதாக, துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதுவரை செவிலியர் பணியில் சேரவில்லை. இதனால், ஐந்து மாதங்களாக, குடும்ப சுகாதார மையம் மூடப்பட்டுள்ளது. இதனால், தங்களது மருத்துவ தேவைகளை சரிவர பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது, கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பகுதி மக்களுக்கு அடிப்படை விழிப்புணர்வு வழங்கவும், அவசர மருத்துவ சிகிச்சை பெற முடியாமல் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.மையத்திற்கு செவிலியரை நியமிக்க வலியுறுத்தி, கலெக்டர் தலைமையில் நடந்த மனுநீதி நாள் கூட்டத்தில் கிராம மக்கள், கோரிக்கை விடுத்த நிலையில், 20 நாட்களுக்குள் செவிலியரை நியமிப்பதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.எனவே, நோய் தொற்று பெருகிவரும் இக்கட்டான இக்காலகட்டத்தில், செவிலியரை விரைந்து நியமிக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X