பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் திட்டத்தில் முகக்கவசம் ஊராட்சிகளில் விற்பனை துவக்கம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

உடுமலை : உடுமலை ஒன்றியத்தில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு தடுப்பு பணிகளாக, மகளிர் திட்டத்தின் சார்பில், முககவசம் மற்றும் 'சானிடைசர்கள் 'விற்பனை துவங்கியுள்ளது.

தற்போது, 'கொரோனா' வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இது பரவுவதை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வதும், இருமல், சளி போன்ற பிரச்னைகளால், நோய்த்தொற்று மற்றவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு, முககவசம் அணிவதும் கட்டாயத் தேவையாக உள்ளது.இதனால் மருந்துக்கடைகளில், சானிடைசர்கள் மற்றும் முககவசங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், சில இடங்களில் அதிக விலைக்கும், தரமில்லாததும் விற்கப்படுகின்றன.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில், முகக் கவசங்கள் மற்றும் 'சானிடைசர்கள்' தயாரிப்பு துவக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், உடுமலை ஒன்றியத்திலும், மகளிர் குழுவினர், அந்தந்த ஊராட்சிகளில், சானிடைசர்கள், 60 ரூபாய்க்கும், முகக்கவசங்கள், 20 ரூபாய்க்கும் விற்பனை செய்ய துவங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X