பொது செய்தி

தமிழ்நாடு

அத்யாவசிய கடைகளுக்கு முன் சுண்ணாம்பு கோடுகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கூடலுார் : கூடலுார், அத்யாவசிய கடைகளுக்கு முன், நகராட்சி சார்பில் சுண்ணாம்பு கோடுகள் போடப்பட்டது.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், அத்தியாவசிய கடைகள் மட்டும் திறந்து செயல்பட அனுமதி அளித்துள்ளது.அதன்படி, கூடலுார் நகராட்சி பகுதியில் திறந்து செயல்பட உள்ள மளிகை கடை, டீக்கடை, காய்கறி கடை, மருந்துகடை, பால் விற்பனையகம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு முன், நகராட்சி ஆணையாளர்பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் சரவணன் முன்னிலையில், நகராட்சி ஊழியர்கள், சுண்ணாம்பு கோடு போட்டு பணியை மேற்கொண்டனர்.

நகராட்சி கமிஷனர் பாஸ்கரன் கூறுகையில்,''அரசு உத்தரவுப்படி திறக்கப்படும் அத்யாவசிய கடைகளுக்கு முன், ஒரு மீட்டர் இடைவெளி விட்டு சுண்ணாம்பு கோடுகள் போடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் அந்த இடைவெளியில், நின்று பொருட்களை வாங்கி செல்லலாம். டீக்கடைகளில் இருக்கைகள் பயன்படுத்தக் கூடாது. கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க அரசு மேற்கொண்டு வரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X