பொது செய்தி

தமிழ்நாடு

பு.முட்லுாரில் போலீசார் பேரிகார்டுஅமைத்து போக்குவரத்திற்கு தடை

Added : மார் 26, 2020
Share
Advertisement
 பு.முட்லுாரில் போலீசார் பேரிகார்டுஅமைத்து போக்குவரத்திற்கு தடை

பரங்கிப்பேட்டை : சிதம்பரத்தில் இருந்து கடலுார் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பு.முட்லுாரில், போலீசார் பேரிகார்டு அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நேற்று முன்தினம் தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. அதற்காக நேற்று சிதம்பரத்தில் இருந்து கடலுார் செல்லும் தேசிய நெடுஞ்சாலை பு.முட்லுாரில் பரங்கிப்பேட்டை இன்ஸ்பெக்டர் பாண்டிச்செல்வி, சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், சாலையின் குறுக்கே பேரிகார்டு அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர்.இருந்தும், தடையை மீறி வந்த கார், பைக்குகளில் வந்தவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அவர்களை திருப்பி அனுப்பினர்.

ஆம்புலன்ஸ், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்வந்த வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதித்தனர். பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை நகர பகுதியில் 144 தடை உத்தரவால், மளிகை, மருந்துக்கடைகள், பால் உள்ளிட்ட கடைகளை தவிர மற்ற கடைகள் மூடப்பட்டிருந்தது. பரங்கிப்பேட்டை நகர பகுதியில் பைக்குகளில் சுற்றியவர்கள், நடந்துச்சென்றவர்களை சப் இன்ஸ்பெக்டர் பொன்மகரம் தலைமையிலான போலீசார் அவர்களை பிடித்து எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X