பொது செய்தி

தமிழ்நாடு

கிருமி நாசினி தெளிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் ராட்சத இயந்திரம் மூலம் அனைத்து வார்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கும் பணி துவங்கியது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், நகராட்சி, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நகர மற்றும் கிராமப் பகுதிகளில் தொற்று நோய் பரவலை தடுக்கும் வகையில் துாய்மைப்பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, விருத்தாசலம் நகராட்சி நிர்வாகம் சார்பில் 33 வார்டுகளிலும் விரைவாக கிருமி நாசினி தெளிக்கும் வகையில் ராட்சத இயந்திரம் மூலம் நேற்று பணியை துவக்கினர்.50 லிட்டர் லைசால், 950 லிட்டர் தண்ணீரில் கலந்து, ராட்சத இயந்திரம் மூலம் ஒரே நேரத்தில் 250 அடி துாரத்திற்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியை மேற்கொண்டனர். இப்பணியை, கமிஷனர் (பொறுப்பு) பாண்டு, மேலாளர் அசோக்குமார், துப்புரவு அலுவலர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்து கண்காணித்தனர். அப்போது, சாலையில் சென்ற வாகனங்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X