பொது செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாளர்கள், ஊழியர்கள் அச்சம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

விருத்தாசலம் : கையுறை, முகக்கவசம் இல்லாமல், பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு, கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் மோடி, நேற்று முன்தினம் இரவு நாட்டு மக்களிடம் பேசினார்.

அதில், நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, நேற்று காலை முதல், நகராட்சி, பேரூராட்சி, சுகாதாரம் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள், கொரோனா பரவலை தடுக்க, அனைத்து தெருக்களுக்கும், வாகனங்களில் சென்று மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் வீடுகளை கண்காணித்து, அவர்களை தனிமை படுத்துவதற்காக, அவர்களின் கைகளில் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்படி பணியாற்றும் பணியாளர்களுக்கு முககவசம் மற்றும் கையுறை இல்லாமல் தனிமைப் படுத்தப்பட்ட நபர்களுக்கு சீல் வைக்கும் நிலை உள்ளது.இதனால் அரசு ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் உடனே கிடைத்திட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து சுகாதார துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், முகக் கவசம், கையுறை எதுவும் எங்களுக்கு முறையாக வழங்கப்படவில்லை. ஒருமுறை பயன்படுத்தும் கையுறை, ஒரு ஜோடி மட்டுமே தற்போது என்னிடம் உள்ளது.நாளைய பணிக்கு என்னிடம் எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லை. சுகாதார துறையில் பணியாற்றும் அனைவருக்கும் இதே நிலைதான் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X