தமிழ்நாடு

பாயும்! அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் ...வியாபாரிகள் மீது குண்டர் சட்டம்

Updated : மார் 26, 2020 | Added : மார் 26, 2020
Share
Advertisement
பாயும்!  அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் ...வியாபாரிகள் மீது குண்டர் சட்டம்

கடலுார் : ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இன்றி நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடும் இடங்களான வழிபாட்டு தலங்கள், பார்க், பீச், கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், வணிக நிறுவனங்கள் ஏற்கனவே, மூடப்பட்ட நிலையில், 144 ஊரடங்கு உத்தரவும் நேற்று முன்தினம் மாலை முதல் அமலுக்கு வந்தது. இதனால், கடலுார் மாவட்டத்தில் வாகன போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. சிறிய அளவிலான மளிகை கடைகள், மருந்தகங்கள், பழக்கடைகள் என, அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் திறந்திருந்தன.

ஆனாலும், கொரோனா அச்சம் காரணமாக, மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வராமல் முடங்கியதால், மக்கள் நடமாட்டமின்றி பஸ் நிலையம், ரயில் நிலையம் மற்றும் நகர வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க மக்கள் அதிக அளவில் வராததால், திறக்கப்பட்ட கடைகளும் வாங்குவதற்கு ஆள் இல்லாமல் வெறிச் சோடியது.

நடைபாதையில் சிறு வியாபாரிகள் கூட காய்கறி, கீரை உள்ளிட்ட பொருட்களை வாங்க ஆள் இல்லாமல் காத்திருந்தனர்.கலெக்டர் அன்புச்செல்வன், எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் ஆகியோர் கடலுார் நகரம் முழுவதும் ரோந்து பணியில் ஈடுபட்டு, ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்கிறார்கள் என ஆய்வு செய்தனர். நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படியும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

குண்டர் சட்டம் பாயும்:
ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்ததையடுத்து, கலெக்டர் அன்புச்செல்வன் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கும். வீட்டிற்கு ஒருவர் வந்து பொருட்களை வாங்கி செல்லலாம். அச்சம் காரணமாக பொருட்களை அதிக அளவில் வாங்கி குவிக்க வேண்டாம், கொரோனாவை காரணம் காட்டி அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாயும் என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X