உடுமலை : வெளியில் இருந்து கிராமத்துக்குள் வருபவர்கள், கைகளை கழுவ, தேவையான பொருட்களை, வைத்து, கிராம மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில், 'கொரோனா' நோய்த்தடுப்புக்காக பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நோய்த்தடுப்புக்காக பல கட்டமாக பணிகள் தொடர்ந்தாலும், மக்கள் சுய கட்டுப்பாடே, நோய் கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் என, சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். அவ்வகையில், சில கிராமங்களில், ஊராட்சி நிர்வாகத்தினரும், மக்களும் இணைந்து பல்வேறு நோய் கட்டுப்பாட்டு முறைகளை பின்பற்ற துவங்கியுள்ளனர். உடுமலை ஒன்றியம், ஜல்லிபட்டியில், கிராமத்துக்குள் வருபவர்கள், கைகளை கழுவிய பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
இதற்காக, ஊராட்சி நிர்வாகம், சார்பில், நால்ரோடு பகுதியில், கைகளை கழுவுவதற்கான சோப் ஆயில், சோப் மற்றும் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி பணியாளர்கள் அவ்வழியாக ஊருக்குள் செல்பவர்களை கைகளை கழுவிய பிறகே அனுமதிக்கின்றனர்.இதே போல், மானுப்பட்டியில், தன்னார்வ அமைப்பினர் சார்பில், பஸ் ஸ்டாப்பில், கைகளை கழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய விழிப்புணர்வு ஒவ்வொரு கிராமமாக பரவி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE