சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணிமனையில் பஸ்கள்! 600 டிரைவர்; கண்டக்டர்கள் வீடுகளில் ஓய்வு ... 'கொரோனா' தடுப்பு உத்தரவால் மாற்றம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

ஊட்டி : கொரோனா' அச்சம் காரணமாக பிறப்பிக்கப்பட்ட, 144 தடை உத்தரவால் அரசு பஸ்கள் அந்தந்த பணிமனைகளில் ஓய்வெடுத்து வருகின்றன.

நீலகிரி அரசு போக்குவரத்து கழகத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் உள்ளிட்ட பணிமனைகளில், 354 அரசு பஸ்கள் உள்ளன. கர்நாடகா, பாலக்காடு மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு, இந்த பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 600க்கும் மேற்பட்ட டிரைவர் கண்டக்டர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.'கொரோனா' அச்சம் காரணமாக, பிரதமர் மோடி அறிவித்த சுய ஊரடங்குக்கு மக்கள் அமோக ஒத்துழைப்பு அளித்தனர். கொரோனா நோயை ஒழிக்கும் வகையிலும், பொதுமக்கள் தங்களை தற்காத்து கொள்ள, நேற்று முன்தினம் இரவு முதல், 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

ஏப்., 14ம் தேதி வரை இந்த உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்யாவசிய பொருட்களை தவிர, அரசு பஸ், தனியார் மினி பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. நீலகிரி, அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான, 354 அரசு பஸ்கள், மாவட்டத்தில் உள்ள, நான்கு பணிமனைகளில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணி முதல் நிறுத்தப்பட்டுள்ளது.'ஏப்., 14ம் தேதி வரை பஸ் இயக்கம் நிறுத்தப்படும்,' என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆண்டு முழுக்க மக்களுக்காக சேவை செய்த அரசு பஸ்கள், 'கொரோனா' அச்சம் காரணமாக அந்தந்த பணிமனையில் ஓய்வெடுக்கின்றன. டிரைவர்கள் கண்டக்டர்கள், மெக்கானிக்குகள் நேற்று முன்தினம் முதல், தங்கள் குடும்பத்துடன் முழு நேரம் ஓய்வெடுத்து வருகின்றனர். சில டிரைவர்கள் கூறுகையில்,'எங்கள் குடும்பத்துடன் முழு நேரம் வீட்டில் இருந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. பெரும்பாலான போக்குவரத்து ஊழியர்களுக்கு, மதியம், 12:00 மணி முதல், மறுநாள் வரை தான் பணி இருக்கும். தற்போது அரசின் உத்தரவின் காரணமாக, வீட்டில் முழு நேரம் குடும்பத்துடன் இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில், குடும்ப முன்னேற்றத்துக்கு தேவையான ஆலோசனைகள் குறித்து பேச முடியும். பிள்ளைகளுடன் விளையாட முடியும். ஒரு புறம், முழு நேரம் வீட்டில் என்பது, எங்களுக்கு கஷ்டமாக இருந்தாலும், மறுபுறம் நம் வாழ்வுக்காக, அரசு எடுத்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு அளிப்போம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X