மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் கிராமங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் கிராமங்கள்

Added : மார் 26, 2020
Share
கோத்தகிரி : கோத்தகிரி கெராடாமட்டம் ஊனமுற்றோர் காலனி மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், இலவசமாக காய்கறிகள் வழங்கப்பட்டன. நீலகிரியில், கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த, அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

கோத்தகிரி : கோத்தகிரி கெராடாமட்டம் ஊனமுற்றோர் காலனி மக்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில், இலவசமாக காய்கறிகள் வழங்கப்பட்டன.

நீலகிரியில், கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த, அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.நீலகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் நடந்து முடிந்த சுய ஊரடங்கு உத்தரவை அடுத்து, நேற்று முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பால் உட்பட, அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் திறக்கப்படும் நிலையில், மாற்றுத்திறனாளிகளால், நகரப் பகுதிக்கு சென்று பொருட்களை வாங்க இயலாத நிலை உள்ளது. மாற்றுத்திறனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அரசு அலுவலர்கள் நேரில் சென்று, இலவசமாக காய்கறிகள் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்து, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, கோத்தகிரி கோடநாடு சாலையில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பிரியா காலனியில், 31 குடும்பங்களுக்கு நேற்று காய்கறிகள் வழங்கப்பட்டன.கோத்தகிரி தாசில்தார் மோகனா தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் லதா, பூவேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சத்யா ஆகியோர் காய்கறிகளை வழங்கினர்.இதேபோல, ஊட்டி ஊராட்சி ஒன்றியம், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட, இடுஹட்டி பாரதிநகர் ஊனமுற்றோர் காலனியில் உள்ள, 70 குடும்பங்கள் மற்றும் கடநாடு அருகே உள்ள ஊனமுற்றோர் காலனிகளிலும், காய்கறிகள் வழங்கப்பட்டன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X