உடுமலை : ஊரடங்கு உத்தரவையொட்டி, பல்வேறு பகுதிகளில் இருந்து கிராமங்களுக்கு திரும்பியவர்களை பரிசோதிக்க, சுகாதாரத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கண்டறியப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களது வீடுகளின் முன்பு சுகாதாரத்துறை சார்பில், நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது; வீட்டினருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய, மாநில அரசுகளின் ஊரடங்கு உத்தரவு வெளியானதும், சென்னை, பெங்களூரு, மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, உடுமலை பகுதியுள்ள, சொந்த கிராமங்களுக்கு நுாற்றுக்கணக்கானோர் திரும்பியுள்ளனர்.
இவர்களில், பெரும்பாலானவர்கள், நெரிசல் மிகுந்த பஸ்களிலும், இதர வாகனங்களிலும், மொத்தமாக பயணித்துள்ளனர். இவ்வாறு, பஸ்களில் வந்தவர்களுக்கு, மாவட்ட எல்லைகளில் எவ்வித பரிசோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.தற்போது, வெளியிடங்களில் இருந்து கிராமங்களுக்கு பெரும்பாலானவர்கள் திரும்பியுள்ள நிலையில், சுகாதாரத்துறையினர் நோய் பரவலை தடுக்க, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அதன்படி, ஊராட்சி நிர்வாகத்தினரிடம், இருந்து, வெளியூரில் இருந்து வந்தவர்கள், பட்டியலை பெற்று, அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
அவ்வீடுகளை சுற்றிலும், கூடுதல் கவனம் செலுத்தி கிருமி நாசினியும் தெளிக்கலாம். இப்பணிகளால், வெளியூரில் இருந்து வந்தவர்கள் மீதான கிராம மக்களின் அச்சம் விலகும்; நோய்த்தொற்று பரவலையும் தடுக்க முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE