சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கையில் 'சீல்' வைத்து, வெளியூர் சென்ற இருவருக்கு எச்சரிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

பெண்ணாடம் : வெளிநாடுகளில் இருந்து பெண்ணாடம் வந்த 4 பேரில் கையில் 'சீல்' வைத்து, வெளியூர் சென்ற இருவரை வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் எச்சரித்து சென்றனர்.

பெண்ணாடத்தில் மீனவர் தெரு, வள்ளியம்மை நகர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, மேட்டுத்தெரு, ராணி மங்கம்மாள் தெரு, கிழக்கு மெயின்ரோடு ஆகிய பகுதிக்கு, வெளிநாடுகளில் இருந்து 6 பேர் வந்திருந்தனர்.அவர்களை வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் கண்காணித்து, அவர்களின் வீடுகளில் 30 நாட்கள் தனிமை படுத்தப்பட்ட வீடு என ஸ்டிக்கர் ஒட்டி, கண்காணித்து வந்தனர்.அதன் தொடர்ச்சியாக, நேற்று அவர்களின் வீடுகளுக்கு வருவாய் ஆய்வாளர் மோகன்தாஸ், வி.ஏ.ஓ., மணிகண்டன், சுகாதார மேற்பார்வையாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான ஊழியர்கள் சென்று அவர்களின் கையில் தனிமை படுத்தப்பட்டவர்கள் என 'சீல்' வைத்தனர்.

அப்போது, வள்ளியம்மை நகர், கிழக்கு மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த இருவர் வெளியூர் சென்றதாக அவர்களின் பெற்றோர்கள் தெரிவித்தனர். அப்போது, வருவாய் மற்றும் சுகாதாரத்துறையினர் அவர்களை அனுமதியின்றி வெளியே செல்லக்கூடாது எனவும், வந்தவுடன் தகவல் தெரிவிக்க வேண்டும் என எச்சரித்து, சீல் வைக்காமல் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X