பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தடுப்பு பணிகள்: எம்.எல்.ஏ., ஆய்வு

Added : மார் 26, 2020
Share
Advertisement

சிதம்பரம் : சிதம்பரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மற்றும் அம்மா உணவகத்தை எம்.எல்.ஏ., பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சிதம்பம் நகராட்சி சார்பில் நடைபெறும் கொரோனா தடுப்பு பணிகள், அம்மா உணவகம் மற்றும் அண்ணாமலை பல்கலைகழக ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை ஆகிய இடங்களில் நேற்று சிதம்பரம் எல்.எல்.ஏ., பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார். மேலவீதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்தது. அதனை எம்.எல்.ஏ., பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அனைத்து பகுதிகளிலும் இப்பணிகள் செய்து வருவதாக ஆணையாளர் சுரேந்தர்ஷா தெரிவித்தார்.

தொடர்ந்து அம்மா உணவகத்திற்கு சென்று பார்வையிட்டு உணவு பொருட்கள் இருப்பு உள்ளதா என கேட்டறிந்தார். எந்த உதவியானாலும் தெரிப்படுத்த கேட்டுக்கொண்டதுடன், கடுமையாக பணியாற்றும் துாய்மை பணியாளர்களை சாப்பிட சொல்லி உணவு வழங்கினார். பின்னர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று அங்குள்ள நிலை குறித்து மருத்துவ கண்காணிப்பாளர் சண்முகத்திடம் கேட்டபோது , தயார் நிலையில் வார்டுகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டது.

அப்போது சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்தர்ஷா, நகராட்சி உதவி செயற்பொறியாளர் மகாதேவன், டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகேசன், டாக்டர்கள் ராமசுப்ரமணியன், பாரி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X