தமிழ்நாடு

கடலுார் - நாகை மாவட்ட எல்லைக்கு 'சீல்'

Added : மார் 26, 2020
Share
Advertisement
 கடலுார் - நாகை மாவட்ட எல்லைக்கு 'சீல்'

சிதம்பரம் : கடலுார் - நாகை மாவட்ட எல்லை அடைக்கப்பட்டது. சிதம்பரம் தேரோடும் வீதிகள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளதை சிதம்பரம் சப் கலெக்டர் விசுமகாஜன் பார்வையிட்டார்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதையடுத்து கடலுார் - நாகை மாவட்ட எல்லையான வல்லம்படுகையில் டி.எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவின் பேரில் நேற்று அதிகாலை தடுப்பு கட்டைகள் வைத்து அடைக்கப்பட்டது.தொடர்ந்து சிதம்பரத்தின் முக்கிய வீதிகளான தேரோடும் வீதிகள் அனைத்தும் யாரும் உள்ளே நுழைய முடியாதபடி முற்றிலும் 'லாக்' செய்யப்பட்டுள்ளது. சிதம்பரத்தின் நுழைவு வாயிலான வண்டிகேட் அடைக்கப்பட்டு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சிதம்பரம் கீழ வீதியில் செய்யப்பட்ட தடுப்பு பணிகளை சிதம்பரம் சப் கலெக்டர் விசுமகாஜன் பார்வையிட்டு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்முருகன் ஆகியோரிடம் விவரம் கேட்டறிந்தார். தவிர்க்க முடியாமல் வருபவர்கள் சுற்றி வழியில் வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.அனைத்து பகுதிகளிலும் இரு சக்கர வாகனங்களில் கூட உள்ளே செல்ல முடியாதபடி அமைக்கப்பட்டுள்ளது.உள்ளே வருபவர்கள் விவரம் கேட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.

காரணமின்றி வந்தவர்களை உடனடியாக போலீசார் விரட்டி அடித்தனர். அனைத்து கடைகளும் மூடப்பட்டதால் , காவல் துறையினரும், நகராட்சி துாய்மை பணியாளர்கள் மட்டுமே பார்க்க முடிந்தது. டி.எஸ்.பி., தலைமையில் போலீசார் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.காரணமின்றி சுற்றுபவர்களை கண்டித்து அனுப்பி வருகின்றனர். சிதம்பரம் நகரமே வெறிச்சோடி காணப் படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X