சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குன்னுாரில் குடிநீர் தட்டுப்பாடு கோடை காலத்தில் மக்கள் அவதி

Added : மார் 26, 2020
Share
Advertisement

குன்னுார் : 'குன்னுாரில், 9 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை வழங்கும் குடிநீரை, 3 நாட்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

குன்னுார் நகராட்சியில், 30 வார்டுகளுக்கு குடிநீர் ஆதாரமான ரேலியா அணை, கரன்சி, ஜிம்கானா, பந்துமை, ஹைபீல்டு உள்ளிட்ட தடுப்பணைகளில் இருந்து தினமும், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இதில், 43.6 அடி உயரம் கொண்ட, ரேலியா அணையில், 38 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. எனினும், 9 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, கைகழுவுவது, குளிப்பது, துணி துவைப்பது உள்ளிட்டவைகளுக்கு கூடுதலாக தண்ணீர் தேவைப்படுகிறது.

ஆனால், பல நாட்களுக்கு தேவையான தண்ணீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்தி வரும் மக்கள் தற்போது என்ன செய்ய என்பது தெரியாமல் தவிப்பில் உள்ளனர்.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, ஹைபீல்டு பகுதியில், துார் வாரும் பணி நடந்தது. அதில், குழாய்களில் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டதால், குடிநீர் வழங்குவதில் முழு தடை ஏற்பட்டுள்ளது.

சமூக ஆர்வலர் பத்பநாபன் கூறுகையில்,''நாள் ஒன்றுக்கு தற்போது, 23 லட்சம் லிட்டர் குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், குடிநீர் வினியோகத்தை முறைப்படுத்தி, 3 நாட்களுக்கு ஒரு முறை வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட ஹைபீல்டு தடுப்பணையை தூர்வாரி, நிறுத்திவைக்கப்பட்ட தண்ணீரை திறந்து விட வேண்டும். பந்துமையில், 24 மணி நேரமும் மோட்டார் இயக்கி குடிநீர் வழங்க வேண்டும்,'' என்றார்.

சமூக ஆர்வலர் முபாரக் கூறுகையில்,''ஏற்கனவே, ஹைபீல்டு பகுதியில் தண்ணீரை சேமிக்க, 'ஆப்பிள் பீ' பகுதியில் பயனற்று கிடக்கும் குடிநீர் தொட்டியை சீரமைத்து, தண்ணீரை சேமித்து வழங்க வலியுறுத்தினோம்.நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை.பராமரிப்பு இல்லாமல் பல இடங்களிலும் உள்ள குடிநீர் தொட்டிகளை சீரமைத்து மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X