பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறிக்கு மூன்று மடங்கு வரை விலை அதிகரிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

குன்னுார் : குன்னுார் நகராட்சி மார்க்கெட்டில், மூன்று மடங்கு வரை அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டதால், அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

குன்னுார் மார்க்கெட்டில், அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்வதாக, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் சென்றது.இதன் அடிப்படையில், சப்--கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமையில், தாசில்தார் குப்புராஜ், குன்னுார் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் பபிதா, நகராட்சி சுகாதார ஆய்வாளர் மால்முருகன் உட்பட அதிகாரிகள ஆய்வு செய்தனர். \\

இதில், தக்காளி, வெங்காயம் உட்பட அத்யாவசிய காய்கறி பொருட்கள், உழவர் சந்தையை விட, 2 முதல் மூன்று மடங்கு அதிக விலைக்கு விற்கப்படுவதும், எந்த கடையிலும் விலை பட்டியல் வைக்காததும் தெரிய வந்தது. தொடர்ந்து, மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தில் கூட்டம் நடந்தது.அப்போது, சப்--கலெக்டர் ரஞ்சித் சிங் பேசுகையில்,''தற்போது அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விற்பதில் தடையில்லை. எனினும், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, கூடுதலாக விற்பது தவறு. கட்டாயம் விலை பட்டியல் வைக்க வேண்டும், மீறும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார். கூட்டத்தில், வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.கோத்தகிரிகோத்தகிரியில்,பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் ஆய்வு செய்தார். \

மார்க்கெட், பஸ் ஸ்டாண்ட் மற்றும் பஜார் உள்ளிட்ட பகுதிகளில், ஐந்துக்கு மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மூலம், கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டதை ஆய்வு செய்தார்.கடை உரிமையாளர்களிடம், 'காய்கறி, பழம் மற்றும் மளிகை பொருட்களின் விலை பட்டியலை கடைகளில் கண்டிப்பாக வைக்க வேண்டும். கூடுதல் விலைக்கு உணவுப்பொருட்கள் விற்பனை செய்வதாக தெரிய வரும் பட்சத்தில், அபராதத்துடன், கடைக்கு'சீல்' வைத்து, சட்டப்படி கைது நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரித்தார். ஆய்வின் போது, கோத்தகிரி பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X