பொது செய்தி

தமிழ்நாடு

ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிர்பார்ப்பில் விவசாயிகள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கூடலுார் : 'கூடலுாரில் விவசாயிகள் பயனடையும் வகையில், ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரியில் உற்பத்தியாகும் விவசாய விளைபொருட்கள் சமவெளி பகுதிகளுக்கு மட்டுமின்றி, கூடலூர் வழியாக கேரளாவுக்கு அதிக அளவில் செல்கிறது. இங்கு உற்பத்தியாகி, கேரளாவுக்கு செல்லும், 14 வகையான விவசாய விளைபொருட்களுக்கு, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, மாவட்ட கமிட்டி சார்பில் சந்தை கட்டணமாக, ஒரு சதவீதம் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், விவசாயிகள், வியாபாரிகள் வசதிக்காக, மாவட்டத்தில் நான்கு இடங்களில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக, கூடலுாரில் இதற்காக இரண்டு ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் விரைவாக ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வலியுறுத்தி உள்ளனர்.விவசாயிகள் கூறுகையில்,'இங்கு, காய்கறிகள் தவிர இஞ்சி, வாழை குறுமிளகு, பாக்கு உள்ளிட்ட பல விளைபொருள்கள் விளைவிக்கப்படுகிறது.

இவைகளுக்கு, வியாபாரிகள் விலை நிர்ணயம் செய்து நேரடியாக கொள்முதல் செய்வதால், சரியான விலை கிடைப்பதில்லை. இதனால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுசெய்ய, கூடலுாரில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விரைவாக திறக்க வேண்டும்,' என்றனர்.அதிகாரிகள் கூறுகையில்,'கூடலுாரில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. அரசு உத்தரவு கிடைத்தவுடன், பணிகள் துவங்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X