இந்தியா

பெட்ரோல் பங்க் உரிமையாளர் வெட்டி கொலை; வில்லியனூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

வில்லியனுார் : வில்லியனுார் அருகே நள்ளிரவில் பைக்கில் சென்ற பெட்ரோல் பங்க் உரிமையாளரை வெட்டி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

புதுச்சேரி மாநிலம், பாகூர் அடுத்த இருளன்சந்தை கிராமத்தை சேர்ந்த தேவராசு மகன் புருேஷாத்தமன்(49). காரைக்கால் ஐ.டி.ஐ.,யில் பணியாற்றி வந்தார். 10 ஆண்டிற்கு முன் சேதராப்பட்டு அடுத்த கரசூரில் பெட்ரோல் பங்க் துவங்கினார். அரசு ஊழியர் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருவதாக வந்த புகாரை அடுத்து பேராசிரியர் பணியில் இருந்து விருப்பு ஓய்வு பெற்றார்.இவருக்கு திருமணமாகி திலகவதி என்ற மனைவியும், தனபிரவின் என்ற மகனும், தனபிரியா என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக திலகவதி விவாகரத்து பெற்று கடலுாரில் உள்ள தனது தாய் வீட்டில் மகள் தனபிரியாவுடன் வசித்து வருகிறார். தனபிரியா எம்.பி.பி.எஸ்., இறுதி ஆண்டு படித்து வருகிறார்.புருஷோத்தமன் தனது தாயார் தனலட்சுமி, மகன் தனபிரவின் ஆகியோருடன் ஐயங்குட்டிப்பாளையம், அமைதி நகரில் வசித்து வருகிறார். தனபிரிவின், இன்ஜினியரிங் முடித்துவிட்டு, ஐ.ஏ.எஸ்., தேர்வுக்கு சென்னையில் தங்கி பயிற்சி வகுப்புக்கு சென்ற வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கரசூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்த பெட்ரோல் லோடை இறக்கிய பிறகு இரவு 11:30 மணிக்கு தனது பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். ஊசுட்டேரி சாலையில் லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி அருகே சென்ற போது, பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்ம நபர்கள், புருஷோத்தமனின் பின் கழுத்தில் கத்தியால் வெட்டினர். அதில் அவர் சுருண்டு விழுந்ததும், மர்ம நபர்கள் மீண்டும் முன்பக்க கழுத்தை வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அதில் அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அவ்வழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இரவு 12:00 அளவில் சம்பவ இடத்திற்கு சென்ற வில்லியனுார் போலீசார், புருேஷாத்தம்மன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, புருஷோத்தமனை யார், எதற்காக கொலை செய்தனர். கொலை செய்த நபர்கள் எத்தனை பேர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று பீதியில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த போதிலும், புதுச்சேரியில் கூலிப்படையின் அராஜகம் தொடர்வது, மக்களை அச்சமடைய செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X