இந்தியா

கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க பாரம்பரிய பழக்கத்திற்க முக்கியத்துவம் கொடுத்தும் கிராமங்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி : கொரோனா வைரசில் இருந்து தப்பிக்க கிராமங்களில் மக்கள் பாரம்பரிய பழக்க வழக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். நவீன நாகரிகயுகத்தில் வீடுகளில் சாணம் வைத்து மெழுகுவது, வீட்டு வாசல் முன்பு சாணம் தெளிப்பது, மஞ்சள் நீர் தெளிப்பது போன்ற நடைமுறைகள் குறைந்துவிட்டன.

தற்போது கொரோனா அச்சத்தால் இந்த நடைமுறைகளை மீண்டும் புதுச்சேரி கிராமங்களில்மக்கள் கடைபிடிக்க தொடங்கி உள்ளனர்.பகலில் வீடுகளில் வேப்பிலை கட்டி மஞ்சள் தண்ணீர் தெளித்து வருகின்றனர்.அத்துடன் வீடுகளில் அதிகாலை, மாலை வேளைகளில் நாட்டு சாம்பிராணி மற்றும் வேப்பிலை கொண்டு புகை போடுகின்றனர்.அதுமட்டுமின்றி மஞ்சள் சார்ந்த நம்பிக்கைகளும் தலைதுாக்கியுள்ளது.ஏழு வீடுகளில் இருந்து தண்ணீரை பெற்று வந்து,அதில் மஞ்சள் கரைத்து,பாத்திரங்களில் வீட்டின் முன் வைத்து வழிப்பட்டும்,பிறகு வாசலில் தெளித்தும் வருகின்றனர்.

இரவு நேரங்களில் கிராமங்களில் வீடுகளில் உள்ள குடும்பத்தினரின் எண்ணிக்கைக்குகேற்ப வாசலில் அகல் விளக்கு ஏற்றியும்,மஞ்சள் தண்ணீர் தெளிப்பதும் அதிகரித்துள்ளது. இது குறித்து கிராம மக்கள் கூறும்போது,பழங்காலத்தில் நமது முன்னோர்கள் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க வேப்பிலையை வீடுகளில் கட்டினர். காற்றில் மூலம் பரவும் பூஞ்சை, காளான், பாக்டீரியாக்கள் போன்றவை பரவாமல் காற்றை சுத்தப்படுத்தும் சிறப்பு பணியையும் செய்கிறது வேம்பு. மேலும் மஞ்சள் தண்ணீர் தெளிப்பதன் மூலம் நோய் பரவாமல் தடுக்கப்படுகிறது.

மஞ்சள் கலந்த நீரினை தெளிப்பதால் சிறுசிறு விஷபூச்சிகள், ஈக்கள், கிருமிகள் நிலப்பகுதி வழியே இல்லத்திற்குள் நுழையாது. வேம்பின் வாசனையும், மஞ்சளின் வாசனையும் காற்றில் பரவி பரவசப்படுத்தும். வேப்பிலையும், மஞ்சளும் பெரிய நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாகவும் உள்ளது.அதனால் தான் இந்தக் கரைசலை பயன்படுத்துகிறோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X