சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முட்டையை பதுக்கி அதிக விலைக்கு விற்பதாக புகார்

Added : மார் 26, 2020
Share
Advertisement
கோவை : மளிகை கடைகளில் முட்டையை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ், கோழி இறைச்சி மூலம் பரவுவதாக, வாட்ஸ் - ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிட மக்கள் தயங்கினர். கோழிக்கறி விலை கடும் வீழ்ச்சியடைந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன், ஒரு கிலோ கோழிக்கறி கிலோ, 160 முதல் 200 ரூபாய் வரையும், ஒரு முட்டை

கோவை : மளிகை கடைகளில் முட்டையை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ், கோழி இறைச்சி மூலம் பரவுவதாக, வாட்ஸ் - ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. கோழி இறைச்சி மற்றும் முட்டை சாப்பிட மக்கள் தயங்கினர். கோழிக்கறி விலை கடும் வீழ்ச்சியடைந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன், ஒரு கிலோ கோழிக்கறி கிலோ, 160 முதல் 200 ரூபாய் வரையும், ஒரு முட்டை நான்கு ரூபாய் முதல், அதிக பட்சமாக ஐந்து ரூபாய் வரையும் விற்கப்பட்டது.கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்ததை தொடர்ந்து, ஒரு கிலோ கோழிக்கறி 80 - 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

முட்டை மூன்று ரூபாயாக குறைந்தது.21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, கோழி மற்றும் முட்டை வரத்து குறைந்தது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டது.இதை பயன்படுத்தி சில மளிகை வியாபாரிகள், ஏற்கனவே குறைந்த விலைக்கு வாங்கிய முட்டையை பதுக்கி வைத்து, ஐந்து ரூபாய்க்கு மேல் விற்பனை செய்து வருகின்றனர்.மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்த முட்டையை, ஒரே நாளில், ஐந்து ரூபாய்க்கு விற்கும் வியாபாரிகள் மீது, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X