இந்தியா

ரூ.5,000 வழங்க வேண்டும் ஏ.ஐ.டி.யூ.சி., கோரிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

புதுச்சேரி : 'அமைப்பு சாரா தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு 5,000 ரூபாயும், 25 கிலோ அரிசியும் வழங்க வேண்டும்' என, ஏ.ஐ.டி.யூ.சி., பொதுச் செயலாளர் சேதுசெல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு, மத்திய அரசு அறிவித்த ஒரு நாள் மக்கள் ஊரடங்கை தொடர்ந்து, வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, அன்றாடம் என்ன வருமானம் என்ற உறுதி இல்லாமல் இருந்துவரும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு தொழில்களை நம்பியுள்ள பல லட்சம் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகி, அவர்களது குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன. எனவே புதுச்சேரி அரசு போர்க்கால அடிப்படையில், தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உதவிடும் வகையில் ரூ.5000 மற்றும் 25 கிலோ அரிசி வீடு தேடி வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.புதுச்சேரி அரசு சார்ந்த பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மாத சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X