சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாப்பிள்ளையை அழைத்து வர மாவட்ட கலெக்டரிடம் மனு!

Added : மார் 26, 2020
Share
Advertisement

கோவை : பார்த்து, பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம். பத்திரிக்கை கொடுத்தாச்சு... பந்தக்கால் நட்டியாச்சு... குதுாகலமாக திருமண நாளை எதிர்பார்த்து காத்திருந்த, பல குடும்பத்தினர் 144 தடை உத்தரவால். என்ன செய்வதென்று புரியாமல் குழம்பி நிற்கின்றனர்.இ

தில், ஓய்வு பெற்ற வருமானவரித்துறை அதிகாரி சண்முகமும் தப்பவில்லை. இவர், பீளமேடு ஹோப்காலேஜ் பகுதியில், பெரிய கல்யாண மண்டபத்தில் ஆடம்பரமாக, 30ம் தேதி நடத்தவிருந்த திருமணம், தடை உத்தரவால் சிக்கலை சந்தித்துள்ளது. மணமகளும், மணமகனும் டாக்டர்கள். ஆடம்பரமாக நடக்கவிருந்த திருமணத்தை தற்போது, காந்திமாநகர் கோவிலில் எளிமையாக நடத்த, இருவீட்டார் முடிவு செய்துள்ளனர். மாப்பிள்ளை வீட்டார் புதுச்சேரியில் இருப்பதால், குறிப்பிட்ட நாளில் கோவைக்கு வர அனுமதி கோரி, தற்போது மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.

இது குறித்து, ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி சண்முகம் கூறுகையில், ''எங்களை போல் பலரும் சிக்கலில் உள்ளனர்; அவர்களுக்கும் உதவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X