சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தண்டு துளைப்பான் பாதிப்பு வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

கூடலுார் : 'கூடலுார் பகுதியில், கோடையில் காபி செடிகளில், தண்டு துளைப்பான் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும்' என, காபி வாரிய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கூடலுாரில், தேயிலைக்கு அடுத்தப்படியாக காபி அதிகளவில் பயிரிடப்படுகிறது. ஜன., மார்ச் வரை பூக்கும் காபி பூக்களின் மகரந்த சேர்க்கைக்கு, கோடைமழை அவசியம்.ஆனால், நடப்பு ஆண்டு கோடைமழை ஏமாற்றி வருவதால், காபி மகசூல், பாதிக்கும் சூழல், ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், நீண்ட வறட்சி, வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால், காபி செடிகளை வெள்ளை தண்டு துளைப்பான் பாதிப்பு அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.காபி வாரிய துணை இயக்குனர் நிர்மல்டேவிஸ் கூறியதாவது, ''காபி செடிகளில் தற்போது ஏற்படும் தண்டு துளைப்பான் நோய் பாதிப்யை தடுக்க, இந்த இரு மாதத்தில் நிழல் மரங்களில், கிளைகள் அகற்றுவதை தவிர்க்க வேண்டும்.

பாதிப்பு குறைவாக உள்ள செடிகளின் தண்டு, கிளைகளில், சாக்குபைகள் சுற்றி, அதன் மீது, காபி வாரியம் பரிந்துரைக்கும் பூச்சி கொல்லி மருந்து தெளிக்க வேண்டும். அதிகம் பாதிப்பு உள்ள செடிகளை வேரோடு அகற்றி அழிக்க வேண்டும். மேலும், செடியின் மைய தண்டு, முதிர் கிளைகளில், 200 லிட்டர் தண்ணீரில், 'குளோர்பைரிபாஸ்-50 இ.சி; சைபர்மெத்ரின்-5 இ.சி, கலவையை, 240 மில்லி, 200 கிராம் ஒட்டு திரவம் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த நோய் ஏற்படுவதை தடுக்க முடியம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X